மாருதி சுசுகி ஆல்டோ K10 :34 கிமீ மைலேஜ்! நாட்டிலேயே விலை குறைந்த கார்! மேலும் சிறப்பு தள்ளுபடி!CSD மூலம் வாங்கினால் ரூ.90,000 சேமிக்கலாம்!
Maruti Suzuki Alto K10 34 Km Mileage The cheapest car in the country And special discount Save Rs 90000 if you buy through CSD
நாட்டின் மலிவான மற்றும் அதிகம் விற்பனை ஆகும் கார்களில் ஒன்றான மாருதி சுசுகி ஆல்டோ K10 இப்போது CSD (Canteen Stores Department) மூலம் இந்திய வீரர்கள் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. CSD வாயிலாக இந்த காரை வாங்கும் போது ₹75,000 முதல் ₹90,000 வரை தள்ளுபடி பெறலாம்.
CSD என்றால் என்ன?
CSD என்பது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமாக, பாதுகாப்புப் படையினருக்கும் ஓய்வுபெற்ற வீரர்களுக்கும் மலிவான விலையில் அத்தியாவசிய பொருட்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்குகிறது. இந்தியாவில் 34 CSD டிப்போக்கள் உள்ளன, முக்கியமாக டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்படுகின்றன.
மாருதி ஆல்டோ K10 CSD விலை
வழக்கமான மார்க்கெட் விலையை விட CSD விற்பனை விலைகள் குறைவாக உள்ளன:
1.0L பெட்ரோல்-மேனுவல் VXI – ₹4,29,597 (₹84,903 தள்ளுபடி)
VXI பிளஸ் – ₹87,916 தள்ளுபடி
1.0L பெட்ரோல்-தானியங்கி VXI – ₹88,575 தள்ளுபடி
VXI பிளஸ் (AMT) – ₹90,329 தள்ளுபடி
1.0L CNG-மேனுவல் VXI – ₹87,565 தள்ளுபடி
LXI மாடல் – ₹4,17,823 (வழக்கமான விலை ₹4,93,500, ₹75,677 தள்ளுபடி)
ஆல்டோ K10 சிறப்பம்சங்கள்
- K-Series 1.0L Dual Jet, Dual VVT பெட்ரோல் எஞ்சின் – 66.62PS பவர், 89Nm டார்க்
- மைலேஜ் – மேனுவல் 24.39 kmpl, AMT 24.90 kmpl, CNG 33.85 km/kg
- 7-inch SmartPlay Studio டச் ஸ்கிரீன் (Apple CarPlay, Android Auto)
- பாதுகாப்பு அம்சங்கள் – ABS, EBD, பின்புற பார்க்கிங் சென்சார், வேக அலாரம்
- 6 நிறங்களில் கிடைக்கும் – ஸ்பீடி ப்ளூ, எர்த் கோல்ட், சிஸ்லிங் ரெட், சில்க்கி ஒயிட், சாலிட் ஒயிட், கிரானைட் கிரே
சிஎஸ்டி மூலம் காரை வாங்குவது எப்படி?
CSD மூலமாக ஆல்டோ K10 வாங்குவதற்கு ராணுவத்தினர், ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள். CSD அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் முன்பதிவு செய்து, தேவையான ஆவணங்களுடன் வாங்கலாம்.
English Summary
Maruti Suzuki Alto K10 34 Km Mileage The cheapest car in the country And special discount Save Rs 90000 if you buy through CSD