நடு தெருவில் நடந்துச் சென்ற மாணவிக்கு சில்மிஷம் - கேமராவால் சிக்கிய வாலிபர்..!
man arrested for assualting to student in coimbatore
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே உள்ள அழகுகலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், மாணவி நேற்று முன்தினம் வழக்கம் போல் பயிற்சி முடிந்ததும் தனது வீட்டை நோக்கி தனியாக நடந்து சென்றார்.
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மாணவியின் மீது மோதுவது போல் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, சாலையை விட்டு இறங்கி ஓரமாக நடந்து சென்றார்.

தொடர்ந்து அந்த வாலிபர், மாணவியின் அருகே வந்து பேச முயன்றார். ஆனால் மாணவி பேசாததனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மாணவியை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். உடனே மாணவி கத்திக் கூச்சலிட்ட உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for assualting to student in coimbatore