சூடு பிடிக்கும் இரட்டை இலை விவகாரம் - தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனு.!
eps case file to election commission for two leaf issue
திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சூரியமூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை.
தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர். அவருக்கு அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதுகுறித்து சிவில் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியாது. ஆகவே சூரியமூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
eps case file to election commission for two leaf issue