சென்னையில் பரபரப்பு - சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு.. போலீசாார் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலையத்தில் சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசியுள்ளனர். இதில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதைபார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் ஆசிட் பாட்டிலை வீசியதாகவும். நல்வாய்ப்பாக அது நேரடியாக அவர்கள் மீது விழவில்லை என்றும், அந்த பாட்டில் அருகே விழுந்த நிலையில், அது தெறித்ததில் சாலையோரம் படுத்துக் கொண்டு இருந்தவர்கள் மீது பட்டுள்ளது. இதில் குழந்தைக்குத் தான் பாதிப்பு மோசமாக ஏற்பட்டுள்ளது. 

மற்றவர்கள் அந்த ஆசிட் நெடியைச் சுவாசித்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாார் விசாரணையை ஆரம்பித்து, ஆசிட் வீசிய நபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples injured acid attack in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->