அதிகாலையில் சோகம் - கேக் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு - பெற்றோருக்கு தீவிர சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் பால்ராஜ் - நாகலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகன் தீரஜ். இதில், பால்ராஜ் ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் வழக்கம் போல் உணவு டெலிவரியில் ஈடுபட்டு வந்தபோது வாடிக்கையாளர் ஒருவர், தான் ஆர்டர் செய்து இருந்த கேக்கை கேன்சல் செய்தார். 

பால்ராஜ் அந்த கேக்கை தனது வீட்டிற்கு எடுத்து வந்து தனது மகன் மற்றும் மனைவிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதில் 5 வயது சிறுவன் தீரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடார்பாக பெங்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கேக் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years old boy died for eat cake in karnataga banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->