கர்நாடகாவில் சோகம் - கால்பந்து விளையாட மறுத்த தந்தை - ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி செயல்.!
foot ball player sucide in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் சாதனகெரே படாவனே பகுதியை சேர்ந்தவர் சரணப்பா கொட்டிஹாலா மகன் சேத்தன். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவருக்கு கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது.
இதன் காரணமாக, சேத்தன் தினமும் மாலை நேரத்தில் கால்பந்து விளையாடுவதற்காக சென்றுவிடுவார். இதனால் சேத்தன் தந்தை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாடுவதற்கு செல்ல கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதனால் மனmuடைந்து காணப்பட்ட சேத்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையறிந்த அவரது பெற்றோர், சேத்தனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சேத்தனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை கெலகெரே ஏரியில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் அது காணாமல் போனதாக தேடப்பட்ட கால்பந்து வீரர் சேத்தன் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
foot ball player sucide in karnataga