டெல்லியின் அரசியல் சூழலை பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு ஊடகங்கள் !!
foreign media shocked by the situation of Delhi
இந்தியாவின் மக்களவை தேர்தலின் முடிவில் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் குடியரசு தலைவர் முன்பு பதவியேற்றனர். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அடங்குவர், கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜக அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமரான நரேந்திர மோடி தனது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை. நேற்று ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவை வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.
யுனைடெட் ஸ்டேட்ஸின் புகழ்பெற்ற செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட செய்தியில், "தற்போது தேர்தெடுக்க பட்டுள்ள அரசாங்கம் பதவியேற்றவுடன், டெல்லியின் அரசியல் காற்று மாறிவிட்டதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்த பிறகு, பிரதமர் மோடி பல கட்சி கூட்டணிக் கூட்டாளிகளின் பக்கம் திரும்பினார், அந்த கூட்டணி கட்சிகள் இப்போது தங்களுக்கு பொருந்தாத வெளிச்சத்தை அனுபவித்து வருகின்றனர். மோடி 3.0 மற்றும் தேர்தல் முடிவுகளை எந்த ஆய்வாளரும் கருத்தில் கொள்ளவில்லை" என்று எழுதியது.
இதேபோல் மத்திய கிழக்கின் புகழ்பெற்ற செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட செய்தியில், "பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில், பெரும்பான்மை இல்லாதது, கூட்டணி ஆட்சியில் கொள்கை உறுதியை உறுதிப்படுத்தும் பாஜகவின் திறனை சோதிக்கும்" என்று கூறியது. பாஜகவின் இக்கூட்டணியில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இரு தலைவர்களும் பாஜகவிற்கு சவாலாக இருக்கலாம். ஏனென்றால் இந்த இரு தலைவர்களுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸில் பல நண்பர்கள் இருப்பதால் தான், இக்கூட்டணியை கவர்வதில் எதிர்க்கட்சியினர் முயல்வார்கள்" என்று எழுதி உள்ளது.
இந்த பிரமாண்ட பிரதமரின் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் உட்பட 8,000 விருந்தினர்கள் கலந்துகொண்டதாக தெரிவித்தனர். பிரதமர் மோடி பாஜகவின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தி தனது கூட்டணி கட்சிகளுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை, ஆகையால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவிற்கு ஈடாக பெரும் சலுகைகளை மோடி அரசிடம் முன் வைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
English Summary
foreign media shocked by the situation of Delhi