முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலமானார்; முக்கிய தலைவர்கள் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

இந்நிலையில், அவரது உடல்நிலை இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸின்  மூத்த தலைவர்கள் மருத்துமவனைக்கு விரைந்து அவரை பார்வையிட்டனர் . அத்தோடு,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவும் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலையிழும், டில்லி பல்கலையிலும் பணியாற்றி உள்ளார். டில்லி ஜேஎன்யூ.,விலும் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தார். 1990 -1991 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்.

1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இக்காலத்தில் தான் புதிய பொருளாதார கொள்கை முதலில் அமல்படுத்தப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்ததவர்.

 

பின் 2004 முதல் 2014 வரை பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்தார். இதன் மூலம், நேரு, இந்திரா, மோடிக்கு பிறகு நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையம் இவரை சாரும். ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். 

இன்று இரவு 9:51 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:  வயது மூப்பு தொடர்பான குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று டிசம்பர் 26ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென நினைவை இழந்துவிட்டார்.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக வீட்டிலேயே துவக்கப்பட்டன. இரவு 8:06 மணியளவில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவர் இரவு 9:51 மணிக்கு காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Prime Minister Manmohan Singh passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->