குடியரசு தின விழா : டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவைகள் நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த வருடம் வருகிற 26-ந்தேதி 73 -வது குடியரசுத் தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

இதன் காரணமாக, விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரெயில்களிலும் நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை நான்கு நாட்களுக்குப் பார்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நடவடிக்கை பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக எடுக்கப்படுவதாக நாட்டின் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four days luggage service stop in all delhi train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->