கொட்டி தீர்த்த கனமழை! வீடு இடிந்து தூங்கிகொண்டிருந்தவர்கள் மேல் விழுந்து 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வீடு இடிந்து  நான்கு பேரும் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் நந்தியாலா மாவட்டம் சின்னவங்காலை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசேகர ரெட்டி. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி  தஸ்தகீரம்மா. இவர்கள் இருவருக்கும் பவித்ரா, குரு லட்சுமி என்று இரண்டு குழந்தைகள் உள்ளது.

தற்போது ஆந்திர மாநிலம் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் குருசேகர ரெட்டியின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த பகுதியில் கன மழை பெய்து வந்ததால் குணசேகரின் மண் வீடு மழையில் நனைந்து நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குணசேகரன் குடும்பத்தினர்.

சுவர் இருந்து விழுந்ததில் இடர்பாடுகளுக்குள் சீக்கியில் கொண்டனர்.  குலசேகரனின் குடும்பத்திறனர் சத்தம் கேட்டு அங்கு விரைந்து அக்கம் பக்கத்தினர் இடர்பாடுகளில்  சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளை அகற்ற முயற்சி செய்தனர்.

அப்போது குணசேகர் ரெட்டி அவரது மனைவி இரண்டு மகள்கள் என நான்கு பேரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சுகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four people were killed when a house collapsed due to continuous heavy rains in Andhra state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->