ஆற்றுக்குள் பாய்ந்த ஜீப் - பரிதாபமாக பறிபோன 4 உயிர்.!
four peoples died jeep accident in chateesgarh
ஆற்றுக்குள் பாய்ந்த ஜீப் - பரிதாபமாக பறிபோன 4 உயிர்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டம் புல்கான் நெடுஞ்சாலையில் உள்ள சிவநாத் ஆற்றின் பழைய பாலத்தில் நேற்று நள்ளிரவு ஜீப் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தவழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
டிராக்டரைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் இருந்து வாகனத்தை இழுக்க முயன்றனர். பலமணி நேர போராட்டத்திற்குப் பின் கிரேன் உதவியுடன் ஜீப் வெளியே எடுக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை ஒட்டி வந்த முப்பது வயது பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு உடல்களையும் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தில் வந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர் என்பதும் அதில், நான்கு பேர் உடல்கள் மட்டும் தற்போது மீட்கப்பட்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், ஐந்தாவது நபரும் நீருக்குள் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகித்து அவரைத் தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் துர்க்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples died jeep accident in chateesgarh