மகாராஷ்டிராவில் சோகம் : குளத்தில் மூழ்கி தந்தை மகன் உள்பட 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சோகம் : குளத்தில் மூழ்கி தந்தை மகன் உள்பட 4 பேர் பலி.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டம் சாமன்காவ் கிராமத்தை சேர்ந்தவர் பகத் இங்லே மகன் யுவராஜ். இவர் பண்ணை வீட்டு உரிமையாளரின் மகன்கள் பகவத் படோல், ஓம்கார் உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது சிறுவர்கள் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதைப்பார்த்த பகத் இங்லே தன் நண்பர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றுள்ளார்.

ஆனால் அவரும் தண்ணீரில் தத்தளித்தார். இதையறிந்த பகத் இங்லே ஓடி சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். 

இது குறித்து தகவலறிந்த கிராமமக்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.அப்போதுதான் அவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து தந்தை, மகன் உள்பட நான்கு பேர் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died rowned water in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->