நகைக்கடையில் கைவரிசையை காட்டிய இளைஞர்கள் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


நகைக்கடையில் கைவரிசையை காட்டிய இளைஞர்கள் - போலீசார் வலைவீச்சு.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பைடரஹள்ளியில் மனோஜ் குமார் லோஹர் என்பவருக்கு சொந்தமான நகை கடைக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் வந்தனர். அவர்களில் மூன்று பேர் கடைக்குள் நுழைந்து ஷட்டரைப் பூட்டினர். மற்றொருவர் கடைக்கு வெளியே யாரும் வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் திடீரென மனோஜை துப்பாக்கியால் சுட்டு விட்டு 1 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதைபார்த்த பொதுமக்கள் மனோஜை மீட்டு சேஷாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நகைக்கடையில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகை திருடப்பட்டுள்ளது. 

குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்துள்ளோம். குற்றவாளிகள் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து ஒரு இருசக்கர வாகனத்தை விட்டு விட்டுத் தப்பியுள்ளனர். அந்த வாகனத்தை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four youths steal one kg gold in banglore jewellary shop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->