இலவச கல்வி, மருத்துவம் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின உரை.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில், டெல்லி அரசு சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, 

"அனைத்து மக்களுக்கும் சிறந்த கல்வி மற்றம் சுகாதாரம் கிடைத்தால், ஒரே தலைமுறையில் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும். 

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாக தான் அந்நாடுகள் பணக்கார நாடுகளாக மாறின. 

இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தற்போது சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்கி விட்டன. ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதி கிடைக்கும் போது தான் மூவர்ணக் கொடி உயரப் பறக்கும்.  

தேசிய தலைநகரில் தற்போது கிடைப்பதை போன்றே நாடு முழுவதும் சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை 5 ஆண்டுகளில் ஏற்படுத்தி தர முடியும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free Education Medicine Delhi Chief Minister Arvind Kejriwals Independence Day Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->