பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி -அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் போல சத்தீஸ்கர் மாநிலத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு என்று அறிவித்துள்ளது.

அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசாக ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச் செல்லப்படும் என சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் ஹெலிகாப்டர் சவாரி மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் புதிய புத்துணர்ச்சியை பெறுவார்கள். ஹெலிகாப்டர் பயணம் குழந்தைகளின் மனங்களில் வாழ்க்கையிலும் விண்ணுயுற பறக்கும் விருப்பத்தை வளர்க்கும் என்பதே எனது நம்பிக்கை. அவர்கள் லட்சியத்தை அடைவதற்காக தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free helicopter ride for students get first place in the public examination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->