பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்! முதல்வர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழா நேற்று இ.சி.ஆர் சாலையில் உள்ள காமராஜ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொடக்க கல்வி இணை இயக்குனர் பூபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகள் தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கும் முதல்வர் ரங்கசாமி பரிசுகளை வழங்கினார். 

இந்த விழா மேடையில் பேசிய முதல்வர் ரங்கசாமி "இந்தியாவை உலகின் சிறந்த நாடாக மாற்றப் போகிறவர்கள் மாணவர்கள் தான். அதனால்தான் மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் சிறந்த கல்வியை பெற்று உயர்ந்தவர்களாக வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற கல்வி மிகவும் அவசியமானது. கல்வியை கொடுப்பது அரசின் கடமை என்பதால் புதுச்சேரி அரசு சிறப்பாகவும் சரியாகவும் செய்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் உடனுக்குடன் உங்கள் சந்தேகங்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம் மழைக்காக விடுமுறை விட்டாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஆன்லைன் மூலம் கல்வியை கற்கும் வாய்ப்பு உள்ளது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். 

புதுச்சேரி அரசு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் வழங்க உள்ளது. அதேபோன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் இலவச லேப்டாப் வழங்கப்படும்" என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free Laptops will given to school students again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->