"ஞாயிற்றுக்கிழமை ஓய்வு" உரிமையை பெற்றுத்தந்த அய்யன்காளி பிறந்த தினம்.!
Freedom fighter ayyankali birthday today
தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.
கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு" உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்கு இவர் பெற்றுத்தந்தார்.
சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றிற்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.
தன் சமூக மக்களை ஒன்றிணைத்து சாதுஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை 1905ஆம் ஆண்டு தொடங்கினார். காந்தியடிகள் 1937ஆம் ஆண்டு வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி 1941ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
Freedom fighter ayyankali birthday today