நகைக்கடன் சுற்றறிக்கை - ரிசர்வ் வங்கி மேலாளருக்கு நோட்டீஸ்..!!
madhurai high court order notice to reserve bank manager
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைராஜன், மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்கடன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது உள்ளிட்டவை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டுள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
madhurai high court order notice to reserve bank manager