தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடல் - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்.!!
coming 10th tasmac shop holiday in tamilnadu
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், பார்களும் இயங்கி வருகின்றன. இந்த மதுபான கடைகள் மூலம் தினசரி ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதிலும், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
இருப்பினும், இந்த டாஸ்மாக் கடைகள் ஆண்டில் சில முக்கியமான நாட்களில் மூடப்படுவது வழக்கம். இது தவிர தேர்தல் சமயங்களில் அனைத்து டாஸ்மாக் கடைகளுமே மூடப்பட்டுவிடும்.
இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 10th tasmac shop holiday in tamilnadu