கிரிக்கெட் விளையாட்டில் 'நோ பால்' கொடுத்த அம்பையர்! கத்தியால் குத்தி 'ஆல் அவுட்' செய்த எதிரணியினர்! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில்  நடுவராக இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .

ஒரிசா மாவட்டத்தின் சௌத்வார் என்ற பகுதியில் உள்ள மன்ஹிசலந்தா என்ற கிராமத்திலுள்ள இளைஞர்கள் இணைந்து கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். ஜாலியாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் லக்கி ராவுத்  என்ற 22 வயது இளைஞர் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த கிரிக்கெட் போட்டியானது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஆட்டத்தின் நடுவரான லக்கி  ஒரு பந்தை நோபாலாக அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பந்துவீச்சாளரும், ஃபில்டர்களும் அவரிடம் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கிரிக்கெட் மட்டையை வைத்து தாக்க தொடங்கினர்.

இந்நிலையில் எதிரணியைச் சார்ந்த ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற இளைஞர் நடுவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த  நடுவர் லக்கி அங்கிருந்து அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் லக்கி ராவுத். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friendly match went wrong umpire stabbed to death due to no ball issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->