24 மணி நேர டிஜிட்டல் சேவை! பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.!
Full time digital service
பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர டிஜிட்டல் சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போதுள்ள வங்கிகள் டிஜிட்டல் வங்கி சேவைகளை தொடங்கலாம் என ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளுக்கு தெரிவித்துள்ளது. அவை 24 மணி நேரமும் டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
டிஜிட்டல் வங்கி சேவை 24 மணி நேரமும் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல், பணத்தை டெபாசிட் செய்தல், கடன் கேட்டு விண்ணப்பித்தல் சுய விவரங்களை திருத்துதல், புகார் அளித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மூலமாக 24 மணி நேரமும் பெற முடியும்.
English Summary
Full time digital service