கங்கையில் நீராடினால் சரியாகிவிடும்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!  - Seithipunal
Seithipunal


டெல்லியைச் சேர்ந்த சிறுவனுக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

இருப்பினும் ரத்த புற்றுநோய் தாக்கம் அதிகமானதால் சிறுவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு புனித நதியான கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகும் என நினைத்து உத்தரகாண்ட் டேராடூன் சென்றனர். 

இவர்களுடன் சிறுவனின் அத்தை சென்றுள்ளார். நேற்று காலை கங்கை நதியில் இறங்கி சிறுவனின் அத்தை அவரை நீரில் மூழ்கடித்துள்ளார். சிறுவனுக்கு கடும் குளிரால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் தொடர்ந்து சிறுவனை நீரில் மூழ்கடித்தபோது  அவரது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் இருந்த சிறுவர் வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். 

அப்போது சிறுவனின் அத்தை அவர்களுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

மேலும் சிறுவனது உடலை வைத்து, அத்தை உயிருடன் வந்துவிடுவார் என வழிபாடு செய்ததாகவும் அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரத்த புற்று நோய் காரணமாக 5 வயது சிறுவனின் உயிர் பறிபோகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganga dip cure blood cancer boy died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->