இந்தியாவில் வறுமையை ஒழிக்க இதை செய்தால் போதும் - தொழிலதிபர் கௌதம் அதானி.! - Seithipunal
Seithipunal


இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி,  விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ஆம் ஆண்டுக்குள் முப்பது ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டாள்  நமது நாட்டில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளதாவது,

"இந்தியா 2050-ஆம் ஆண்டினை நெருங்குவதற்கு இன்னும் பத்தாயிரம் நாட்கள் இருக்கிறது. இதற்கிடையே உள்ள நாட்களில் கூடுதலாக நாம் 25 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். 

அதாவது நாள் ஒன்றுக்கு 2.5 பில்லியன் டாலர் ஜிடிபியை இந்தியா அடைய வேண்டும். இந்த நாட்களில் இந்தியாவின் வறுமை முழுமையாக ஒழிந்து விடும்.

இந்த பொருளாதாரத்தை அடையும் இலக்கு குறுகிய காலத்தில் பெரிய இலக்காக தோன்றலாம். ஆனால் நாம் மாரத்தான் போல விடாமல் ஓடி இந்த இலக்கை அடைந்துவிடலாம்". என்று தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Adani say about Indian Economy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->