இந்தியர்களின் சாட்களை திருடும் ஜி.பி.வாட்ஸப் -  இஎஸ்இடி தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, வாட்ஸ்-அப் போன்ற தோற்றத்துடன் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க அதிகம் பேர் உள்ளனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் போன்று பிளே ஸ்டோரிலுள்ள ஜிபி வாட்ஸ்ஆப் இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் அபாயம் உள்ளது என்று இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

பயனர்களின் மெசேஜ்களை டேம்பரிங் செய்யவும் ஜிபி வாட்ஸ்ஆப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியர்களின் சாட்களை ஜிபி வாட்ஸ்ஆப் திருடுவதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அங்கீகரிக்கப்படாத குளோனிங் செயலிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்ந்தால் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gb whatsapp hack indiyan people chat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->