பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை தாக்கி வாயில் எரியும் கட்டையை திணித்த கொடூர சம்பவம்.!
girl attacked and a burning log stuffed in her mouth claiming to be a ghost
ஆசிரமம் ஒன்றில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை அடித்து வாயில் எரியும் கட்டையை திணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசாமுண்ட் மாவட்டம் பதேராபலி கிராமத்தில் ஜெய் குருதேவ் மானஸ் என்ற ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு அபான்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பேய் ஓட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி ஆசிரமத்தில் வழங்கும் உணவில் விஷம் கலந்ததாக கூறி ஆசிரம நிர்வாகி மற்றும் சீடர்கள் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிறுமியின் வாயில் எரியும் மரக்கட்டையை திணித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதில் சிறுமி பலத்த காயம் அடைந்தால் இந்த விவகாரம் குறித்து சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், ஆசிரம நிர்வாகி மற்றும் சீடர்கள் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ஆசிரமத்திற்கு பேய் ஓட்ட வேண்டும் என்று இது போல் பலர் வருவதாகவும் அவர்களுக்கு இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆசிரமத்தின் நடவடிக்கைகள் மற்றும் அமைந்துள்ள பகுதி குறித்து மாநில வருவாய் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகி மற்றும் சீடர்கள் மூன்று பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
girl attacked and a burning log stuffed in her mouth claiming to be a ghost