மரண தண்டனைகே பாய் பாய் சொன்ன சீரியல் ரேபிஸ்ட்.....
Girl sexually assaulted by unidentified assailants
கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்குச் செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதுடன், போக்சோவில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 11 வயது சிறுமிக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நரசிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் ஒரு குடிசையில் அந்தச் சிறுமி வசித்து வந்தாள். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அச்சிறுமி காணாமல் போனாள். அதற்கடுத்த நாள் பக்கத்தில் உள்ள காட்டில் பலத்த காயங்களுடன் அச்சிறுமியைப் போலீசார் கண்டெடுத்தனர்.
நரசிங்கர்த் துணை பிரிவு காவல் அதிகாரி இச்சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அதன்பின் அருகே உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, பின்னர்ப் போபாலில் ஹமீடியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதனை அடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்ததைக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பின்னர்க் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்குச் செல்லும் ரயிலில் வருவதை அறிந்து உடனடியாகப் போலீசார் அவரைக் கைது செய்யப்பட்டனர்.
அதிர்ச்சி தகவல்
2003 ஆம் ஆண்டில் ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட ரமேஷ் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டனார்.
பின்னர் 2013இல் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்ட ரமேஷ், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைச் செய்தார். இந்த வழங்கிலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்து, வெளியே வந்த ரமேஷ் தற்பொழுது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைச் செய்ததை போலீசார்க் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரைப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Girl sexually assaulted by unidentified assailants