மொபைலில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமி: நொடியில் நேர்ந்த பரிதாபம்! மாரடைப்பு காரணமா? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேசம், காமினி (வயது 5) என்ற சிறுமி தனது தாயின் அருகே படுத்துக்கொண்டு மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது சிறுமி திடீரென மயக்கம் அடைந்ததும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சமூக நல மைய பொறுப்பாளர், சிறுமி மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மருத்துவ அதிகாரிகள், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என குடும்பத்தினரிடம் கேட்டோம். 

ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடைபெற்ற வருகிறது என தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக 10 கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl watching cartoons mobile phone after died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->