ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்... இஸ்ரோ விஞ்ஞானிகளின் மேலும் ஒரு மைல் கல் - ஜி.கே.வாசன் - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்த, நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டுக்கள், வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலைநிறுத்தியது பாராட்டுக்குரியது. இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.

மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராக்கெட் தயாரிப்பில் இந்தியாவுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் உலக அளவில் பெருமை சேர்கிறது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக சென்று, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் தனித்திறமை உலகம் முழுவதும் வெளிப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல். மத்திய அரசு - இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும்.

ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை தயாரிக்க, விண்ணில் செலுத்த, என்.வி.எஸ். 01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த ஆரம்பம் முதல் கடுமையான உழைப்பையும், முயற்சிகளையும் மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் த.மா.கா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan says GSLV F12 Rocket A Milestone for the Achievement of ISRO Scientists


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->