கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை பதவியேற்பு.!
Goa Chief Oath ceremony
கோவா மாநில முதலமைச்சராக பிரம்மோத் சாவந்த் நாளை பதவி ஏற்றுக் கொள்கிறார்.
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
கோவா மாநிலத்தில் நடந்த தேர்லில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.
இதையடுத்து கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
இந்த பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.