பட்ஜெட் 2023 : மீண்டும் அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


தங்கம் வெள்ளியின் விலை குறைக்கப்படுமா என எதிர்பார்த்த நிலையில் தங்கம், வெள்ளி வைரத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஆட்சி அமைத்த நிலையில் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன்படி இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர உள்ளது. ஏற்கனவே தங்கத்தின் விலை 40 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது அதன் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால்  நகை பிரியர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold, silver and diamond tax increase


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->