குஜராத்தில் அமையும் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்ய கூகுள் முடிவு..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய ஃபின்டெக் மையம் திறக்கப்படும் என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். நேற்று வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது "அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம்.

குஜராத்தில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம். டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்ற நாடுகள் பின்பற்ற விரும்பும் திட்டமாக மாறி உள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்திற்கு முன்னதாகவே இருந்தது" என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google decide global fintech center to be set up in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->