அரசு ஊழியர்கள் ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த தடையில்லை; மத்திய அமைச்சர் தகவல்..! - Seithipunal
Seithipunal


மக்களவையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024 மற்றும்  ரெயில்வே திருத்த மசோதா-2024 ஆகியவை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர் குறித்த மசோதாக்கள் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்நிலையில், அங்கு குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, மக்களவையில் நேற்று அந்த மசோதாக்களில், சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு என்பதற்கு பதிலாக, 76-வது ஆண்டு என்று திருத்தம் செய்யப்பட்டு, மக்களவையில் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டதோடு, பொது தகவலின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில்,  ''கிராமப்புற மக்களும் தங்களது குறைகளை தெரிவிக்க வசதியாக, ஆன்லைன் குறைதீர்ப்பு இணையதளத்தை நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களுடன் இணைத்துள்ளோம்'' கூறியுள்ளார். மேலும், 05 லட்சத்து 10 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் குறைகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government employees are not prohibited from using AI apps Union Minister informs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->