ராம ராஜ்ஜியம் தான் சிறந்த அரசாங்கம்.! - ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் "கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்"  இந்த நாளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர் ’’ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறது. எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 

சிறந்த அரசாங்கம் என்பது ராம ராஜ்ஜியம்தான். தமிழில் கிராம ராஜ்ஜியத்தை சிறந்த ராஜ்ஜியமாகச் சொல்வார்கள். கிராம அளவில் நிர்வாகம் செய்யப்படுவதுதான் கிராம ராஜ்ஜியம். அதுவே ராம ராஜ்ஜியம். ராம பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முக்கியமான தருணம். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களின் மகிழ்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை’’ என தனது மகிழ்ச்சையை வெளிப்படுத்துயுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Tamilisai said Rama Rajyaam is the best govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->