ஒப்புதலுக்காக வந்த எந்த மசோதாக்களும் தன்னிடம் இல்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


ஒப்புதலுக்காக வந்த எந்த மசோதாக்களும் தன்னிடம் இல்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்.!!

தெலுங்கானா மாநிலத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த செய்திக்குறிப்பில் கவர்னர் ஒப்புதல் பெறுவதற்காக எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை. 

இதுவரைக்கும் தன்னிடம் ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களில் மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. 

மீதமுள்ள மசோதாக்கள் மாநில அரசின் விளக்கம் மற்றும் தகவலுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது" என்று அந்த செய்திக்குறிப்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும், அந்த செய்திக்குறிப்பில் "இந்த அறிவிப்பு பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக வெளியிடுவதாகவும், மசோதா தொடர்பான எந்த செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு கவர்னர் மாளிகையில் விளக்கம் பெற்று வெளியிடுமாறு செய்தி நிறுவனங்களை கேட்டுக்கொள்வதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor thamilisai soundar rajan explain no bill is pending


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->