கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் பிரச்சாரம் செய்ய கூடாது.!
govt staffs should not campaign in election candidates in karnataga assembly election
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் பிரச்சாரம் செய்ய கூடாது.!
வருகிற மே மாதம் 10 ஆம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று குடகு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சதீஷ், அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- "சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது.
இதனால் தேர்தல் விதிகளை அதிகாரிகள் மிகக் கடுமையாக பயன்படுத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே ஊர்வலம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட வேண்டும்.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போதும், செல்லும்போதும் அதனை போலீசார் முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். அப்போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
வேட்பாளர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வேட்பாளர்களின் வரவு, செலவு கணக்குகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு துறைகளில் பணியாற்றும் யாரும் செயல்படவோ, பிரசாரத்தில் ஈடுபடவோ கூடாது. வேட்பாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
govt staffs should not campaign in election candidates in karnataga assembly election