உக்ரைனில் இருந்து வெளியேறிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்-முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக தாயகம் திரும்பினர். இந்த நிலையில் மாணவர்களின் படிப்பில் எந்த விதமான பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். சுமார் 700 மருத்துவ மாணவர்கள் தெலுங்கானாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt to pay for tuition fees for students leaving Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->