திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து கொடுத்த மணமகன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து கொடுத்த மணமகன் - நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில், ஒரு வீட்டில் திருமணம் ஒன்று நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே மணமகன் மணப்பெண்ணுக்கு விவாகரத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் அதியடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி பேசியதாவது, "தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி உள்ளிட்டோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்த பிறகு டோலியின் மணமகன் முகமது ஆசிப், வரதட்சணையாக கார் வழங்காததால், அதிருப்தி அடைந்து இப்போதே கார் வாங்கித் தர வேண்டும் அல்லது அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

அதற்கு தாங்கள் இவ்வளவு சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறியதால், ஆசிப் மண்டபத்திலேயே விவாகரத்துக் கூறிவிட்டு உடனடியாக தனது குடும்பத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்" என்று அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் சகோதரர் கம்ரன் வாசி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிப் மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

groom divorced to bride within two hours after marriage in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->