முஸ்லிமாக மாறப்போறேன்! மிரட்டல் விடுத்த 'காங்கிரஸ் தலித் தலைவர்' மீது பாய்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டம்!
Gujarat BJP MLA Congress Dalit Leader Islam Convert issue
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தலித் தலைவர் மற்றும் அவரின் குடும்பத்தார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், கோண்டல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கு (பாஜக பெண் எம்எல்ஏ) கீதாபா ஜடேஜா, அவரின் கணவர், மகன் ஆகியோர், காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவரான ராஜு சோலங்கியை தாக்கியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் குஜராத் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ராஜ சோலங்கி, அவரின் குடும்பத்தார் நேற்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ராஜு சோலங்கி குடும்பத்தினர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு சில புகார்கள் எழுந்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் ராஜ சோலங்கி குடும்பத்தினர் கொலை முயற்சி, போலீசாரை தாக்கியது, கொள்ளை, கலவரம், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்திற்கும் கடந்த 10 ஆண்டுகளாக ராஜூ சோலங்கி தான் தலைவனாக இருந்து வழிநடத்தி வருவதாகவும் போலீசா தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி ராஜ சோலங்கி, தன் மகன் மீது 11 நபர்கள் சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருந்தார். இந்த தாக்குதலுக்கு எம்.எல்.ஏ கீதாபா ஜடேஜா, அவரின் கணவர், மகன் தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
ஆனால், எம்எல்ஏ மற்றும் அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், தற்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜ் சோலங்கி மற்றும் அவரின் குடும்பத்தார் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பாய்ச்சு உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
English Summary
Gujarat BJP MLA Congress Dalit Leader Islam Convert issue