குஜராத் | 132 பேர் பலி, 60 பேர் காணவில்லை! விபத்து காரணம்; பாலத்தை ஆட்டிய இளைஞர்கள்?!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க, 140 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று மாலை இந்த பாலத்தின் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் சொல்லப்படுகிறது. அப்போது திடீரென பாலம் அறுந்து விழுந்ததில் 400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர்.

இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, 

மேலும், 60 தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட தகவலின்படி, நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பாலத்தில் கூடியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், சில இளைஞர்கள் பாலத்தின் நடுவில் நின்றுகொண்டு பாலத்தை ஆட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat cable bridge collapsed Machchhu river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->