"ஃபயர் ஹேர் கட்" பலத்த காயங்களுடன் இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்.!
gujarat young men fire hair cut goes wrong
ஃபயர் ஹேர் கட் என்ற முறையில் முடி திருத்தம் செய்ய முயன்ற இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் சமீப காலமாக ஃபயர் ஹேர் கட் என்று அழைக்கப்படும் நெருப்பை பயன்படுத்தி முடி திருத்தம் செய்யப்படுகின்ற முறை வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வாபி நகரில் வசிக்கும் ஒரு 18 வயது இளைஞர் ஃபயர் ஹேர் கட் முறையில் முடி திருத்தம் செய்த போது தலையில் தடவப்பட்ட கெமிக்கலினால் பயங்கரமாக முடி தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
இந்த நெருப்பை அணைப்பதற்குள் அவரது மார்பு மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. தற்போது அவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை தொடர்ந்து, சலூன் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்து இதில் எந்த வகையான ரசாயனம் தடவப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
gujarat young men fire hair cut goes wrong