பயப்படாதீங்க.... வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள் - கிண்டலடித்த மோடி.!!
modi speech muthra yojana scheme meeting
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் இன்று முத்ரா யோஜனா பயனாளிகளுடன் கலந்துரையாடினார். முத்ரா யோஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அவர், ஒரு பயனாளியிடம் உங்கள் வருமானம் என்ன? என்று கேட்டார். பிரதமர் மோடியின் இந்தக் கேள்வியால் பயனாளி தயங்கினார்.
அவரிடம் "நிதியமைச்சர் என் அருகில் அமர்ந்திருக்கிறார். நான் அவரிடம் சொல்கிறேன். பயப்படாதீர்கள். வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்" என்று கிண்டலாக பேசினார். இதனால், அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.
முத்ரா யோஜனா திட்டம் பின்தங்கிய குறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை அந்த நிறுவங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
English Summary
modi speech muthra yojana scheme meeting