ரஷ்யாவுக்காக போரில்ஈடுபட்ட சீனர்கள்; உக்ரைன் ராணுவத்திடம் சிக்கியதால் பாப்பரப்பு..!
Chinese soldiers fighting for Russia were captured by the Ukrainian army and caused chaos
ரஷ்யா சார்பில் சீனர்கள் இருவர் போரில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் நாட்டு ராணுவத்திடம் சிக்கி உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. அத்துடன், பல்வேறு பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் எழுந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவோரை ஏமாற்றி அழைத்து வந்து போரில் ஈடுபடுத்துவதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், ரஷ்யாவின் நட்பு நாடுகளான வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள், தெரிந்தே ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்கள் சப்ளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ரஷ்யா ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்துள்ளது.

இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். அத்துடன், ஐநா பாதுகாப்பு சபையின் பொறுப்புள்ள நிரந்தர உறுப்பினர் என்ற நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. இது தொடர்பாக சீன அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chinese soldiers fighting for Russia were captured by the Ukrainian army and caused chaos