மும்பை பாபா சித்திக் சுட்டுக்கொலை: இருவர் கைது! காங்கிரஸ் கடும் கண்டனம்!
Gunshot Baba Siddique death Mumbai
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக், மும்பையில் நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
சித்திக் மீது மர்ம நபர்கள் சுட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்து. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
66 வயதான பாபா சித்திக், 48 ஆண்டுகாலமாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்து வந்தார்.
கட்சி உடைந்த பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். தற்போது இவரின் மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
மகனின் அலுவலக பகுதியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை வழக்கில் இதுவரை இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சூழல் முற்றிலும் சீர் குலைந்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Gunshot Baba Siddique death Mumbai