#BREAKING || கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து.!
Guwahati Bikaner Express derailed
மேற்கு வங்க மாநிலத்தில் கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு புறப்பட்ட கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தரம் தடம்புரண்டு உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் தோமோஹானி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில்கள் தடம் புரண்டதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்போது ரயில்வே அதிகாரிகள், மீட்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் பகுதியில் இருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி செல்லக்கூடிய இந்த விரைவு ரயில், மேற்கு வங்க மாநிலத்தில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் மற்றும் படுகாயம் அடைந்த நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ANI NEWS : கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் 15633 இன்று மாலை சுமார் 5 மணியளவில் தடம் புரண்டது. பிகானர் எக்ஸ்பிரஸ் இன்று மாலை தோமோஹானி (மேற்கு வங்கம்) அருகே தடம் புரண்டது. உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை.
English Summary
Guwahati Bikaner Express derailed