கேரளாவில் மாட்டு இறைச்சி உண்பதே நிலச்சரிவுக்கு காரணம்! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பசுகளை வதை செய்வதாலே நிலசரிவு ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலம் வளநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் நிலசரிவு ஏற்பட்டு 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நிலசரியில் சிக்கி உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் மீட்பு குழுவினருடன் இணைந்து மற்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒரு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்தோர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் உணவு,   பிஸ்கட் பால் போன்ற அத்தியாயத்தை பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, 2018 முதல் நடந்த பேரிடர்களின் நீங்கள் ஆய்வு செய்து பார்த்தால் பசுவதை செய்யப்பட்ட பகுதியில் தான் அதிக பேரிடர் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்பது தெரியும். வயநாடு நிலசரிவானது பசுவதையோடு நேரடியாக தொடர்பு உடையது. கேரளாவில் பசுவதை அதிகம் நடப்பது இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gyan Dev Ahuja Landslide in Kerala State Due to Continuous Cow Crushing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->