குட் டே பிஸ்கட் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


குட் டே பிஸ்கட் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம் - நடந்தது என்ன?
 
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டிப்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடமலை. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது சகோதரர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனமான குட் டேவில் ஐந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். 

அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து தின்ற போது அதில் தலைமுடி இருந்துள்ளது. அந்த பிஸ்கட்டைச் சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் பிஸ்கட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட வடமலை சம்பவம் குறித்து புதுச்சேரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

அந்த தீர்ப்பில் பிஸ்கட்டில் தலைமுடி இருந்த நிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hair on good day biscuit in puthuchery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->