ஹரியானா வன்முறை.. 2 வாரங்களுக்குப் பிறகு இன்று முதல் இணைய சேவை.!
Hariyana riot give network service from today
ஹரியானா மாநிலத்தில் நூஹ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு பிறகு செல்போன் இணைய சேவைகளுக்கான சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு விஷ்வா ஹிந்து பரிஷத் அமைப்பினரின் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஒரே தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊர்வலத்தின் போது மர்ப நபர்கள் சிலர் கற்களை வீசியதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அங்கு கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் இந்த வன்முறையில் காவலர்கள், பொதுமக்கள் என இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டா தெரிவித்திருந்தார்.
இந்த வன்முறையையடுத்து நூஹ் மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த கலவரம் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் நூஹ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Hariyana riot give network service from today