காதலன் மீது 5 லிட்டர் ஆசிட்.. காதலியின் வெறிச்செயல்.. கதறும் அத்தை.!  - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் ஷியாம் சிங் என்ற நபர் (25 வயது) தனது பெற்றோரை இழந்த நிலையில் அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு அஞ்சலி என்ற 23 வயது பெண்ணுடன் பழக்கமான நிலையில், சில நாட்களுக்கு முன் அஞ்சலி தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். 

ஷியாம் சிறிது அவகாசம் கேட்டுள்ளார். இதற்கிடையில், அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. இதனால், ஷாமின் காதலை ஏற்றுக்கொள்ள அத்தை மறுத்து விட்டார். எனவே, அந்தப் பெண்ணிடம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று ஷியாம் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த அஞ்சலி எனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் என்று மிரட்டினார். 

இதனால் அஞ்சலியுடன் பேசுவதையே ஷியாம் நிறுத்திக் கொண்டார், இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 இல் ஷியாம் வீட்டை விட்டு வெளியில் வந்த போது அஞ்சலி தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர் மீது வீசி உள்ளார். 

இதில் அவரது கை, கால், கழுத்து, வாய், இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் எரிந்து விழுந்தது. வலி தாங்காமல் அலறி அடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷாமின் அத்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hariyana women acid on her boy friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->