அரூர் அருகே 10 ஆம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது! - Seithipunal
Seithipunal


அரூர் அருகே 10 ஆம் வகுப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது:

தருமபுரி: அரூர் அருகே உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இது குறித்து அரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரகாஷ் மற்றும் குழுவினர் எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர். 

அங்கு சோதனை நடத்தியபோது, சந்திரசேகரன் (வயது42) என்பவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக தெரியவந்து டாக்டர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், சந்திரசேகரன் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இல்லாமலும், எந்தவித உரிமமும் பெறாமலும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி டாக்டர் என்பதும் உறுதியானது.

சந்திரசேகரன் அந்த பகுதியில் சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பதால், மருத்துவ அலுவலர் அருண் பிரகாஷ் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

அதன் பேரில் போலி டாக்டர் சந்திரசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்துகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட போலி டாக்டரை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harur fake doctor arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->