150 பேரின் கதி என்ன? இடிந்துவிழுந்த அரிசி ஆலை! மொத்த மாநிலமும் பேர் அதிர்ச்சியில்..! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம், கர்னாலில் மூன்று மாடி அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விழுந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது..

தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் தூங்குவது வழக்கம் என்பதால், இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்ட தகவல்படி, இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சுமார் 150 தொழிலாளர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் மொத்தம் 24 பேர் மீட்கப்பட்டுள்ளார். அவர்களில் 20 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, கட்டிடத்தில் சில குறைபாடுகள் இருப்பதை முதல்கட்ட பார்வையில் கண்டறிந்தோம். சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  NDRF மற்றும் SDRF குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று, போலீசார் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana building collapsed in Karnal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->